அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு
Published on

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கம்போல் தனது வேலைகளை முடித்து கொண்டு மதிய உணவு இடைவேளைக்காக அலுவலக அறையில் இருந்து வெளியேறினார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிளகாய் தூள் பொடியை அவர் மீது வீசியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கெஜ்ரிவாலை தாக்கிய அந்த நபர் அனில் குமார் ஹிந்துஸ்தானி என்பது போலீசார் விசாரனையில் தெரிய வந்தது. இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அல்கா லம்பா, “முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதிய உணவு இடைவேளைக்காக தனது அறை அமைந்துள்ள மூன்றாம் மாடியில் இருந்து வெளியே சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிளகாய் பொடி வீசினார். ஆனால் முதலமைச்சர் மூக்கு கண்ணாடி அணிதிருந்ததால் அவருக்கு எந்தப் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் அந்த நபரை முதல்வர் தடுக்க முயன்ற போது அவரது மூக்கு கண்ணாடி உடைந்து போனது” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள டெல்லி காவல்துறை முதலமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முற்றிலும் தவறிவிட்டது என்றும் அவர் குற்றசாட்டியுள்ளார்.

இந்நிலையில் மிளகாய் பொடி வீசிய சம்பவத்துக்கு டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கண்டனம் தெரிவித்துள்ளார். “முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசியது சகித்துக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாத செயல் என்றும்  இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை, செருப்பு போன்ற பொருட்கள் வீசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com