டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு...மக்கள் அவதி

டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு...மக்கள் அவதி

டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு...மக்கள் அவதி
Published on

டெல்லியில் காற்றில் கலந்துள்ள மாசின் அளவு தொடர்ந்து அதிகமாக இருப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
நேற்றைவிட மாசு அளவு குறைந்திருந்தாலும் இன்னமும் மோசமான சுற்றுச்சூழலே நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டத்துடன் புகையும் கலந்துள்ளதால் 64 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 14 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டதுடன், இரண்டு ரயில்கள் முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. 
மக்கள் அதிக அளவு தண்ணீர் பருக அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், புகையோ தூசோ அதிகமுள்ள பகுதிகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை வாகன பயன்பாட்டிற்கு டெல்லி அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் பதிவெண் அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் வாகனங்களை இயக்கமுடியும். மேலும் மாசை குறைக்க சாலைகளில் உள்ள மரங்கள் மீது நீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com