என்னா ஒரு ஜம்ப்ப்ப்ப்ப்பு! மிரள வைத்த மான்.. வைரல் வீடியோ!
நின்ற இடத்திலேயே மேலே எம்பிக் குதித்து வேலியை தாண்டிய மானின் வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
ஒடிசா மாநிலத்தில் பணியாற்றிவரும் வனத்துறை அதிகாரி (ஐ.ஃஎப்.எஸ்.) சுசாந்தா நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு மான் ஒன்று வேலிக்கு மறுபுறம் நிற்கிறது. அந்த வேலி மானின் உயரத்தை விட சிறிது அதிகமாக இருக்கிறது. வேலியை தாண்டிச் செல்ல முடிவெடுத்த அந்த மான் நின்ற இடத்திலேயே மேலே எம்பிக் குதித்து வேலியை தாண்டிச் செல்கிறது. ஸ்லோமோஷனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, மானின் மின்னல் வேக பாய்ச்சலை அற்புதமாக காட்டுகிறது.
‘’சில மான்கள் 8 அடி கூட குதிக்கின்றன. ஆனால் சிவப்பு கங்காருக்கள் அனைத்து பாலூட்டிகளை விடவும் வேகமாக குதிப்பவை. மணிக்கு 56 கிமீ வேகத்தில் குதிப்பதை கற்பனை செய்து பாருங்கள்’’ என்று சுசாந்தா நந்தா பதிவிட்டுள்ளார்.