மனித பரிணாமம் குறித்த டார்வின் கோட்பாடு தவறு : மத்திய அமைச்சர் புதிய கருத்து

மனித பரிணாமம் குறித்த டார்வின் கோட்பாடு தவறு : மத்திய அமைச்சர் புதிய கருத்து
மனித பரிணாமம் குறித்த டார்வின் கோட்பாடு தவறு : மத்திய அமைச்சர் புதிய கருத்து

குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாடு தவறானது என மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் நகரில் அகில இந்திய வேதிக் சம்மேளன மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சத்யபால் சிங், குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாடு தவறானது என்று கூறினார்.

மேலும், “குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நம்முடைய மூதாதையர்கள் யாரும் இந்தக் கருத்தை எழுதவும் இல்லை. வாய்வழி வார்த்தையாகக் கூட சொன்னது இல்லை” என்றார். பூமி உருவான காலத்தில் இருந்தே மனிதன் மனிதனாகத்தான் இருந்தான். டார்வினின் இந்த கோட்பாடு அறிவியல் பூர்வமாகவே தவறானது. இதை பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்" என்று அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

1859-ல் வெளியான ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற புத்தக்கத்தில் பரிணாம வளர்ச்சி தொடர்பான கோட்பாடுகளை சார்லஸ் டார்வின் விளக்கி இருந்தார். இந்த கோட்பாடுகள் அறிவியல் உலகின் புரட்சிகரமான கருத்து என்று பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com