பனை மரத்தில் ஏறியபோதே மாரடைப்பு : தொழிலாளி சறுக்கி இறந்த பரிதாபம்

பனை மரத்தில் ஏறியபோதே மாரடைப்பு : தொழிலாளி சறுக்கி இறந்த பரிதாபம்
பனை மரத்தில் ஏறியபோதே மாரடைப்பு : தொழிலாளி சறுக்கி இறந்த பரிதாபம்
Published on

சேலத்தில் பனை மரம் ஏறும் தொழில் செய்த தொழிலாளி மரத்தின்மீது இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரியாம்பட்டி கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பனைத் தொழில் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுள் ஒருவரான மாரியம்மன் (65) வயது முதிர்வு ஏற்பட்டும் பனை தொழில் செய்துவருகிறார். இவர் சுமார் 50 ஆண்டுகளாக பனை தொழில் மட்டும் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கியும், பனை கருப்பட்டி செய்தும், பனை நுங்கு வெட்டியும் விற்பனை செய்தார்.

இந்நிலையில் மாரியப்பன், துட்டம்பட்டி கிராமத்திற்கு பனை மரம் ஏறச் சென்றார். பனை மரத்தில் பாதுகாப்பு வளையத்தை மாட்டிகொண்டு ஏறிய அவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மரத்தின் மேலே இருந்து சரிந்துகொண்டே கீழே விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, அவர் இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார், பனை தொழிலாளி மாரியப்பனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com