துக்க நிகழ்வு சென்று திரும்பியபோது சோகம் : கூலித் தொழிலாளி விபத்தில் மரணம்

துக்க நிகழ்வு சென்று திரும்பியபோது சோகம் : கூலித் தொழிலாளி விபத்தில் மரணம்
துக்க நிகழ்வு சென்று திரும்பியபோது சோகம் : கூலித் தொழிலாளி விபத்தில் மரணம்

திருவண்ணாமலையில் துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய கூலி தொழிலாளி லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தவணி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மணி. இவர் ஆரணி அருகே உள்ள இராட்டினமங்கலம் கிராமத்தில் துக்க நிகழ்வுக்கு சென்று மீண்டும் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பினார். ஆரணி - வேலூர் பைபாஸ் சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது, மின்னல் வேகத்தில் வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து லாரி ஓட்டுனர் மார்கபந்து ஆரணி கிராமிய போலீசில் சரணடைந்தார். பின்னர் தகவலறிந்த வந்த ஆரணி கிராமிய போலீசார் உயிரிழந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் லாரியை பறிமுதல் செய்ததுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com