\
“விவசாயிகள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது” - நிர்மலா சீதாராமன்

“விவசாயிகள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது” - நிர்மலா சீதாராமன்

“விவசாயிகள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது” - நிர்மலா சீதாராமன்
Published on

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து அவர்களது குறைகளை நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பேசிய அவர், கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசின் திட்டம் மூலம் வீடு கட்டித்தரப்படும் என உறுதி அளித்தார். 

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் தென்னங்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்தமானில் இருந்து கூட கப்பலில் தென்னங்கன்றுகளை கொண்டு வர தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான மண்ணெண்ணெயை மத்திய பெட்ரோலியத்துறை வழங்கும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்றும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com