கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பெயரில் விருப்ப மனு
மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 23-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனுவை மார்ச் 19-ஆம் தேதி முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். இதனிடையே தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிடம், விருப்ப மனுக்களை பெற்று அவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கிய நிலையில், முதல் மனுவாக ராகுல் காந்தி பெயரில் காங்கிரஸ் தொண்டர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர்.