ஆறுதல் வெற்றியை தொடருமா சென்னை?: இன்று கொல்கத்தாவுடன் மோதல்.!

ஆறுதல் வெற்றியை தொடருமா சென்னை?: இன்று கொல்கத்தாவுடன் மோதல்.!

ஆறுதல் வெற்றியை தொடருமா சென்னை?: இன்று கொல்கத்தாவுடன் மோதல்.!

ஐபிஎல் தொடரின் 49வது போட்டியில் இன்று சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. 3முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணி இந்த முறை பிளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. ஏற்கெனவே ஐபிஎல் தொடரைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில் சிஎஸ்கேவுக்கு இன்றைய போட்டி ஆறுதல் வெற்றிக்காகவே.

ஆனால் கொல்கத்தா அணிக்கு இன்றைய போட்டி முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. நான்காம் இடத்திற்கு கடுமையான போட்டி நிலவிவரும் நிலையில் சென்னை உடனான இன்றைய போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.

ஆடும் லெவன் கணிப்பு:

சென்னை அணி:
டூப்லெசிஸ்/வாட்சன், ருத்ராஜ் குய்க்வாட், அப்பத்தி ராயுடு, தோனி, ஜெகதீசன், ஜடேஜா, சாம்கரன்,தீபக் சாஹர்/தாக்கூர், மிட்சல் சாட்னர், இம்ரான் தாஹிர், மோனு குமார்

கொல்கத்தா அணி:
கில், நிதிஷ் ரானா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்தி, இயான் மார்கன், சுனில் நரேன், பாட் கும்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி/நிதிஷ் லாட், பிரஷித் கிருஷ்ணா, லாகி பெர்குஷன், வருண் சக்கரவர்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com