"எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" ஷேன் வாட்சன் சூளுரை !

"எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" ஷேன் வாட்சன் சூளுரை !

"எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" ஷேன் வாட்சன் சூளுரை !
Published on

இனி வரும் போட்டிகளில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் 3 இல் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. எனவே சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இந்நிலையில், ஷார்ஜாவில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் சென்னை வெற்றிப் பெற்றால் இன்னும் பிளே ஆஃப் சுற்று செல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதலாம். தோல்வியடைந்தால் ஐபிஎல் கனவு சென்னைக்கு முடிந்ததாகவே அர்த்தம்.

இந்நிலையில், சென்னை அணியின் முக்கிய வீரரான ஷேன் வாட்சன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் அதில் "அடுத்த 4 போட்டிகளில் நாங்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிப் பெற வேண்டும். அதற்கு அசாதாரனமான திறமையை வெளிப்படுத்த வேண்டும். எனவே அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் போட்டியில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்றார்.

மேலும் "சிஎஸ்கே ரசிகர்கள் எப்போதும் எங்களுக்கு நிபந்தனையில்லா அன்பை எப்போதும் தருகின்றனர். எனவே அவர்கள் செலுத்திய அன்புக்கு திரும்ப கொடுக்க வேண்டிய கடமையும் எங்களுக்கு இருக்கிறது" என்றார் ஷேன் வாட்சன்"

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com