வெற்றியுடன் நிறைவு செய்யுமா சிஎஸ்கே?.. இன்று பஞ்சாப் உடன் பலப்பரீட்சை..!

வெற்றியுடன் நிறைவு செய்யுமா சிஎஸ்கே?.. இன்று பஞ்சாப் உடன் பலப்பரீட்சை..!

வெற்றியுடன் நிறைவு செய்யுமா சிஎஸ்கே?.. இன்று பஞ்சாப் உடன் பலப்பரீட்சை..!
Published on

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் உடன் தனது கடைசிப் போட்டியில் சென்னை மோதுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெறாமல் சென்னை அணி ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில் கடைசிப் போட்டியில் வெற்றிப்பெறுமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கடந்த இரு ஆட்டங்களில் பெங்களூரு, கொல்கத்தாவுக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இளம் வீரர்களின் பங்களிப்பினால் சென்னை அபார வெற்றிப்பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது சென்னை அணி. இந்தப் போட்டியிலும் பஞ்சாபை வெற்றிப்பெற்றால் அந்த அணியின் பிளே ஆஃப் கனவு நிறைவேறாமல் போகும்.

பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் 6-ல் வெற்றி, 7-ல் தோல்வியுடன் 12 புள்ளிகளை பெற்றிருக்கிறது. பிளே-ஆப் வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு நடந்து சில ஆட்டங்களின் முடிவு சாதகமாக அமைந்தால் பஞ்சாப்புக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும். அந்த அணியில் கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன் உள்ளிட்டோர் சிறப்பான பார்மில் இருக்கிறார்கள்.

13 ஆட்டங்களில் 5 வெற்றி, 8 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி இன்றையப் போட்டியில் வெற்றிப் பெற்றால் ஓர் இடம் முன்னேறி 7 ஆம் இடத்துக்கு செல்லும். இந்தப் போட்டியில் அபுதாபி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com