மஹாளய அமாவாசை தினத்தன்று காகம் வாடகைக்கு விடப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அமாவாசை தினத்தன்று முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தி, காகங்களுக்கு உணவு வைக்கும் வழக்கம் மக்களிடையே உள்ளது. அந்த உணவை காகங்கள் உண்ணும் போது, இறந்தவர்களே வந்து உண்பதாகவும் நம்பப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் காகங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றுக்கு உணவு படைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதைப் பயன்படுத்தி, ஒருவர் காகங்களை பிடித்து அமாவாசை அன்று வாடகைக்கு விட்டு வருகிறார். அந்த காகங்களுக்கு பலர் போட்டி போட்டு கொடுக்கும் உணவை உண்ண வைக்கும் அவர், அதற்காக கட்டணமும் வசூலிக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.