\
அரசியலில் விமர்சனம் சகஜம்: செல்லூர் ராஜூ‌

அரசியலில் விமர்சனம் சகஜம்: செல்லூர் ராஜூ‌

அரசியலில் விமர்சனம் சகஜம்: செல்லூர் ராஜூ‌
Published on: 

எதிர்க்கட்சிகள் மாறுபட்ட கருத்துக்களை கூறுவது அரசியலில் சகஜமான ஒன்றுதான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

நவம்பர் மாதம் 12ஆம் தேதி நெல்லையில் நடைபெற இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோல் விழா இன்று நடைபெற்றது. நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள், செல்லூர் ராஜூ, கடம்பூர்‌ ராஜூ, ‌மணிகண்டன், ரா‌ஜலட்சுமி, நாடாளுமன்ற ‌உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
பின்னர் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தங்களுக்கு ஒரே எதிரி திமுகதான் எனக் கூறினார். மேலும், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது வாடிக்கையான ஒன்றுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com