பாஜக, அதிமுகவை அப்புறப்படுத்துவதே நோக்கம்: கே.பாலகிருஷ்ணன்

பாஜக, அதிமுகவை அப்புறப்படுத்துவதே நோக்கம்: கே.பாலகிருஷ்ணன்

பாஜக, அதிமுகவை அப்புறப்படுத்துவதே நோக்கம்: கே.பாலகிருஷ்ணன்
Published on

கொள்கையை தெரிவித்துவிட்டு ரஜினி, கமல் அரசியலுக்கு வரட்டும் என சிபிஎம் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மாநில மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன் இருந்த ஜி.ராமகிருஷ்ணனுக்கு பதிலாக தற்போது பாலகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். இவர் அக்கட்சியின் தென் ஆற்காடு மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பாணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் புதிய தலைமுறைக்கு பிரத்யேகப் பேட்டியளித்த பாலகிருஷ்ணன், “திமுக தலைவர் கலைஞர் செயல்பாட்டில் இல்லை,  அதிமுக தலைவரான ஜெயலலிதாவும் இல்லை. இதைத்தான் பிரகாஷ்காரத் கூறினார். தமிழகத்தில் இருந்து பாஜகவையும்,  அதிமுகவையும் அப்புறப்பபடுத்த வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் நோக்கம். ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை வேண்டாம் என சொல்லவில்லை, அவர்களின் கொள்கை குறித்து அவர்கள் தெரியப்படுத்திய பிறகு வரட்டும். அவர்களின் கொள்கை ஏற்புடையதாக இருந்தால் தான் அந்த கொள்கை மீதான அணுகுமுறையை தீர்மானிக்க முடியும்” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com