தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு?: பட்ஜெட் குறித்து முத்தரசன் கேள்வி
மத்திய அரசின் பட்ஜெட் ஏமற்றத்தையே அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கறுப்பு பணத்தை மீட்போம், அனைவரது வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது. அதே போல் விவசாயத்தை வரும் 2022 ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் என அறிவித்துள்ளனர். கடந்த 2014 நாடளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் அறிவித்த விவசாயத்தை இரட்டிப்பு ஆக்கும் வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் மத்திய அரசு உள்ளது” என கூறினார்.
மேலும், “இயற்கை சீற்றங்களால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்கப்டும் என காத்திருந்த நிலையில் அதுவும் இல்லாதது ஏமாற்றமே. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க போராடி வரும் சூழலில் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்யும் என்ற அறிவிப்பால் எதுவும் நடந்து விடாது. வழக்கம் போல் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வரி விலக்கு அளித்து அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளனர்” என்று விமர்சித்தார்.