செல்லூர் ராஜுவிடம் வாக்கு சேகரித்த சிபிஎம் வேட்பாளர்

செல்லூர் ராஜுவிடம் வாக்கு சேகரித்த சிபிஎம் வேட்பாளர்

செல்லூர் ராஜுவிடம் வாக்கு சேகரித்த சிபிஎம் வேட்பாளர்
Published on

நடைபயிற்சி மேற்கொண்டபோது மதுரை மக்களவைத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன், அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் வாக்குசேகரித்தார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நடக்கும் வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் வாக்காளர்களை கவரும் வகையில், பல்வேறு வகைகளில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமூக ஊடகங்கள் மூலம் தீவிர வாக்கு சேகரிப்பை முன்னெடுத்து வருகிறார் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன். 

இந்நிலையில் இன்று காலை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன், ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். 

அப்போது அதே பகுதியில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த அமைச்சர் செல்லூர் ராஜுவும், வெங்கடேசனும் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர். உடனே ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்து கொண்டனர். இதையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜுவிடமும் தான் வாக்கு சேகரித்ததாக சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com