\
மருத்துவமனை ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு கொரோனா நோயாளி தற்கொலை

மருத்துவமனை ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு கொரோனா நோயாளி தற்கொலை

மருத்துவமனை ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு கொரோனா நோயாளி தற்கொலை
Published on

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் ஜன்னல் கம்பியில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன்(60). இவர் கடந்த 12-ஆம் தேதி முதல் கொரோனா உறுதி செய்யப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டு எண் 335 அறையில் சிகிச்சைப்பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவர், அறையின் ஜன்னல் கம்பியில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com