\
சர்ச்சைக்களுக்கிடையே கோவையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

சர்ச்சைக்களுக்கிடையே கோவையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

சர்ச்சைக்களுக்கிடையே கோவையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
Published on

அலங்கார வளைவு சர்ச்சைகளுக்கு இடையே கோவையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

கோவையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக, பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டன. அலங்கார வளைவில் மோதி பொறியாளர் ரகு என்பவர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே பேனர்களை அகற்றும்படி போராடி வந்த கோவை மக்கள் இந்த சம்பவத்துக்கு அலங்கார வளைவே காரணம் என குற்றம்சாட்டி கண்டனக் குரல்கள் எழுப்பினர். 

சென்னை உயர் நீதிமன்றமும், கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும்படி உத்தரவிட்டிருந்தது. இத்தகைய சர்ச்சைக்குரிய சூழலில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர்களும், கட்சித் தொண்டர்களும் கோவைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com