“ஏழு பேர் விடுதலையை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்” - ப.சிதம்பரம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மதுரையில் ப.சிதரம்பரம் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி வரி, முற்றிலும் மாற்றியமைக்கப்படும் என்று கூறினார். பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லையே என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு முன் பிரதமரை அறிவிக்க வேண்டும் என்று விதியில்லை என்று கூறினார்.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுகவின் அறிக்கையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பான கேள்விக்கு, அதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என சிதம்பரம் தெரிவித்தார்.