\
’சேலை - வேஷ்டி’யில் பனிச்சறுக்கு விளையாடிய தம்பதி - வைரல் வீடியோ

’சேலை - வேஷ்டி’யில் பனிச்சறுக்கு விளையாடிய தம்பதி - வைரல் வீடியோ

’சேலை - வேஷ்டி’யில் பனிச்சறுக்கு விளையாடிய தம்பதி - வைரல் வீடியோ
Published on

ஒரு அமெரிக்கவாழ் இந்திய தம்பதி சேலை மற்றும் வேஷ்டியில் பனிச்சறுக்கு விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்போது எங்கு பார்த்தாலும் Couple goals என்று விதவிதமான வீடியோக்கள் மற்றும் போட்டோஷூட்டுகளை நடத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிலிருந்து சற்று வித்தியாசமான வீடியோ ஒன்றை பதிவிட்டு இணையத்தை கலக்கிவருகின்றனர் அமெரிக்கா வாழ் இந்திய தம்பதி.

அமெரிக்காவில் வசித்துவரும் மாது - திவ்யா தம்பதியினர் தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சேலையில் பனிச்சறுக்கு விளையாடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதுபற்றி திவ்யா, ’’எங்களை திசைதிருப்ப நாங்கள் விசித்திரமான ஒன்றை செய்ய நினைத்தோம்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by ?ivya ?aiya (@divyamaiya)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com