காதலர் தினத்தன்று முத்தம் கொடுத்தே சாதனை புரிந்த காதல் ஜோடி.. அங்கீகரித்த கின்னஸ்!

காதலர் தினத்தன்று முத்தம் கொடுத்தே சாதனை புரிந்த காதல் ஜோடி.. அங்கீகரித்த கின்னஸ்!

காதலர் தினத்தன்று முத்தம் கொடுத்தே சாதனை புரிந்த காதல் ஜோடி.. அங்கீகரித்த கின்னஸ்!
Published on

உலகில் பல வகையான, விநோதமான கின்னஸ் சாதனைகள் தொடர்ந்து புரிவதுண்டு. அந்த வகையில் இளம்ஜோடி ஒன்று நீருக்கடியில் நீண்ட முத்தம் கொடுத்து 13 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட கின்னஸ் உலக சாதனையை முறியடித்திருக்கிறது.

பிப்ரவரி 14ம் தேதியான நேற்று உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. தத்தம் காதலர்களும் தங்களது துணைக்காக சர்ப்ரைஸ் செய்து அந்த நாளை சிறப்பித்திருப்பார்கள். இந்த நிலையில் தென்னாப்ரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜோடி ஒன்று காதலர் தினத்தன்று உலக சாதனைப் பட்டியலில் இணைந்திருக்கிறது.

அதன்படி தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த பெத் நீல் மற்றும் கனடாவைச் சேர்ந்த மைல்ஸ் க்ளூட்டியர் என்ற பெண்ணும் 4 நிமிடங்கள் 6 நொடிகளுக்கு நீண்ட நேரம் கடல்நீருக்கு அடியில் முத்தம் கொடுத்ததற்காக கின்னஸ் உலக சாதனையின் அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார்கள்.

இந்த ஜோடி புரிந்த உலக சாதனை குறித்த வீடியோவை கின்னஸ் உலக சாதனையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. இந்த சாதனையை படைப்பதற்காக பெத் நீலும், மைல்ஸும் பல நாட்களாக பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்றும், இந்த ஐடியா இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகவும் கின்னஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

மேலும், பெத் நீலும், மைல்ஸும் 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல நீருக்கடியில் 3 நிமிடங்கள் 24 நொடிகளுக்கு முத்தமிட்டு சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இத்தாலி ஜோடியின் சாதனையை முறியடித்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

சாதனை முத்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் அந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்ததோடு, ’கடினமான சாதனைதான்’ என்றும் குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com