ஈரோடு: ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தம்பதியர் வெட்டிக்கொலை

ஈரோடு: ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தம்பதியர் வெட்டிக்கொலை

ஈரோடு: ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தம்பதியர் வெட்டிக்கொலை
Published on

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக்கேட்ட தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொடுமுடி அருகே சிட்டபுள்ளாம்பாளையம் காலனியை சேர்ந்த மதுசூதனன், தனது நண்பர்களுடன் நேற்றிரவு பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது அவர்கள் மது போதையில் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டு உள்ளனர். இதனை அப்பகுதியில் வசித்து வந்த ரங்கசாமி-அருக்கானி தம்பதியினர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கு தகராறு ஏற்பட்டதையடுத்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

ஆனாலும், ஆத்திரம் குறையாத இளைஞர்கள் நள்ளிரவில் ரங்கசாமி-அருக்கானியை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர், தலைமறைவாக உள்ள இளைஞர்களை தேடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com