\
ஊடக விவாதங்களில் பங்கேற்க தனிக்குழு: அதிமுக அறிவிப்பு

ஊடக விவாதங்களில் பங்கேற்க தனிக்குழு: அதிமுக அறிவிப்பு

ஊடக விவாதங்களில் பங்கேற்க தனிக்குழு: அதிமுக அறிவிப்பு
Published on: 

ஊடகங்களில் நடைபெறும் விவாதத்தில் அதிமுக சார்பில் கலந்து கொள்வதற்காக புதிய குழு விரைவில் அமைக்கப்பட உள்ளதாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சார்பில் ஊடகங்களில் நடைபெறும் பொது விவாதங்களில் கலந்துக் கொண்டு கருத்துகளை தெரிவிப்பதற்கு புதிய குழு ஒன்று விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த குழுவில் தேர்வு செய்யப்படும் நபர்கள் மட்டுமே ஊடங்களில் நடத்தப்படும் விவாத நிகழ்ச்சியில் பங்குப்பெற்று அனைத்து விதமான கேள்விகளுக்கும், அரசின் நிலைபாடுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த குழுவில் இடம்பெறும் பிரதிநிதிகள் குறித்து விரைவில் வெளியிடப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com