\
ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசுவதற்கு தடை விதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசுவதற்கு தடை விதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசுவதற்கு தடை விதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்
Published on

ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசுவது அவர்களின் பேச்சுரிமை தொடர்பான விவகாரம் என்பதால் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வில் வந்தபோது, விசாரணை ஆணைய தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை முடிக்க உத்தரவிட்டனர். அப்போது அமைச்சர்கள் பேச தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பேச்சுரிமை தொடர்பான விவகாரம் என்பதால் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

முன்னதாக திருவாரூர் மாவட்டம் குடவசாலை சேர்ந்த அதிமுக பிரமுகரான முருகானந்தம் என்பவர், தாக்கல் செய்த மனுவில், விசாரணை ஆணையம் அமைத்த பிறகும், ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்களும், பிற அரசியல் கட்சியினரும் பல்வேறு கருத்துகளை கூறி வருவதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையாக நடக்கவில்லை என்பதும், அவரது மரணத்துக்கு பின்னால் மிகப்பெரிய சதி இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் மரணம் குறித்து பேசுவதால், விசாரணை நேரடியாகவோ, மறைமுகமாக பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பொது மேடைகளில் பேசுவதற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com