\
சர்வீஸ்க்கு வந்த சொகுசுகார் : சட்டென திருடிச் சென்ற மர்ம நபர்..!

சர்வீஸ்க்கு வந்த சொகுசுகார் : சட்டென திருடிச் சென்ற மர்ம நபர்..!

சர்வீஸ்க்கு வந்த சொகுசுகார் : சட்டென திருடிச் சென்ற மர்ம நபர்..!
Published on: 

மதுரையில் சர்வீஸ் மையத்துக்கு வந்த சொகுசுகாரை சாலையில் நிற்கும்போது மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றார்.

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள பிரபல நான்கு சக்கர வாகனங்களை பழுதுநீக்கும் சர்வீஸ் நிறுவனத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது விலையுயர்ந்த சொகுசுகாரை பழுதுநீக்க கொடுத்திருந்தார். இந்தக் கார் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சொகுசுகார் சாலையில் நிற்பதை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர், சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் சட்டென காரை திருடிச் சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கார் சர்வீஸ் நிறுவனம், கார் திருடப்பட்டது தொடர்பாக மதுரை எஸ்எஸ் காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காரை திருடிச்சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com