100 கிராமிய கலைஞர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய விஜய் ரசிகர்கள்

100 கிராமிய கலைஞர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய விஜய் ரசிகர்கள்
100 கிராமிய கலைஞர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய விஜய் ரசிகர்கள்

மதுரையில் வேலையின்றி தவிக்கும் 100 கிராமிய கலைஞர்களின் குடும்பங்களுக்கு விஜய் ரசிகர்கள் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டினர்.

கொரோனா காலகட்டத்தில் பல மாதங்களாக நிகழ்ச்சிகள் விழாக்கள் நடைபெறாமல் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவு கூட இல்லாமல் தவித்து வரும் கிராமிய கலைஞர்கள் தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள், 100 குடும்பத்தினருக்கும் தலா 10 கிலோ அரிசி, காய்கறி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டினர். பொருட்களை பெற்றுக்கொண்ட நாடகம் மற்றும் நடன கலைஞர்கள் இசை வாத்தியம் மூலமாகவும் நடனம் மூலமாகவும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com