\
கொரோனா கால மகத்துவர்: நாடக நடிகர்களுக்கு நிவாரணம் வழங்கிய மரம் நண்பர்கள் அமைப்பினர்

கொரோனா கால மகத்துவர்: நாடக நடிகர்களுக்கு நிவாரணம் வழங்கிய மரம் நண்பர்கள் அமைப்பினர்

கொரோனா கால மகத்துவர்: நாடக நடிகர்களுக்கு நிவாரணம் வழங்கிய மரம் நண்பர்கள் அமைப்பினர்
Published on

கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நாடக நடிகர் சங்கத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்களை மரம் நண்பர்கள் அமைப்பினர் வழங்கினர்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்தமிழ் நாடக நடிகர் சங்க கலைஞர்களும் எந்த ஒரு நிகழ்ச்சியும் இன்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதனை அறிந்த புதுக்கோட்டை மரம் நண்பர்கள் அமைப்பினர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கலைஞர்களுக்கு உதவும் வகையில் முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்கத்தைச் சேர்ந்த 40 கலைஞர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com