\
கொரோனா கால மகத்துவர்: மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரணம்

கொரோனா கால மகத்துவர்: மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரணம்

கொரோனா கால மகத்துவர்: மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரணம்
Published on: 

சங்கு குளிப்போர் சங்கங்கள் சார்பில் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் சங்கு குளிப்போர் சங்கங்கள் சார்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மீனவ குடும்பங்களைச் சேர்ந்த 300 பேருக்கு கொரோனா நல தொகுப்பு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கு குளிப்போர் சங்க ஆலோசகரும், சமூக ஆர்வலருமான பேராசிரியை பாத்திமா பாபு தலைமை தாங்கினார். சங்கு குளிப்போர் சங்க தலைவர் இசக்கிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மீனவர் குடும்பத்தினருக்கு அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com