கொரோனா கால மகத்துவர்: 180 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிய கிருஷ்ணகிரி வையகம் பவுண்டேசன்

கொரோனா கால மகத்துவர்: 180 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிய கிருஷ்ணகிரி வையகம் பவுண்டேசன்
கொரோனா கால மகத்துவர்: 180 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிய கிருஷ்ணகிரி வையகம் பவுண்டேசன்

வாழ்வாதாரம் இழந்த நரிக்குறவர் இன மக்களுக்கு வையகம் பவுண்டேசன் சார்பில் இன்று அரிசி பைகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள கரிய சந்திரம் கிராமத்தில் வசிக்கும் 180 குடும்பங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். ஊசிமணி, பாசிமணி, அலங்காரப் பொருட்கள் போன்றவைகளை செய்து வெளியூரில் விற்பதை தங்களது வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பொது முடக்கத்தை அறிவித்துள்ளது. இதனால் இவர்கள் தொழில் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் இருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு நண்பர்கள் உதவியுடன் வையகம் பவுண்டேசன் சார்பில் அங்கு வசிக்கும் 180 நரிக்குறவர் இன குடும்பங்களுக்கு தலா 25 கிலோ வீதம் 180 அரிசி பைகள் வழங்கப்பட்டன.

இதில் புதுச்சேரி முன்னாள் சபாநாயகரும், கம்பன் கழக தலைவருமான விபி.சிவக்கொழுந்து கலந்துகொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி அரிசி பைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில், சூளகிரி வட்டாட்சியர் சரவணன், வருவாய் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com