இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூருக்கு கொரோனா தொற்று உறுதி!

இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூருக்கு கொரோனா தொற்று உறுதி!
இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூருக்கு கொரோனா தொற்று உறுதி!

இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல், இந்தத் தொற்றால் பாதித்து வருகின்றனர். வல்லரசு நாடான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையே கொரோனா ஆட்டிப்படைத்து விட்டது. இந்தியாவிலும் பல அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார் என்பதை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அந்தப் பதிவில், “சில நாட்களூக்கு முன்பு ஒரு கொரோனா பாஸிட்டிவ் நபரை சந்தித்ததன்  காரணமாக, கடந்த ஒரு வாரமாக எனது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். கடந்த இரண்டு நாட்களில் கொரோனாவின் சில அறிகுறிகளால் இன்று எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் எனது இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் இருந்து வருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸிடம் ஆட்சியை இழந்த பாஜக,  2017 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி முதல் ஜெய்ராம் தாக்கூர் முதல்வராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com