\
கொரோனா விழிப்புணர்வு... கை விரல்களில் கார்களை ஏற்றி 10 வயது மாணவன் உலக சாதனை முயற்சி

கொரோனா விழிப்புணர்வு... கை விரல்களில் கார்களை ஏற்றி 10 வயது மாணவன் உலக சாதனை முயற்சி

கொரோனா விழிப்புணர்வு... கை விரல்களில் கார்களை ஏற்றி 10 வயது மாணவன் உலக சாதனை முயற்சி
Published on

பட்டுக்கோட்டை அருகே கொரோனா விழிப்புணர்வுக்காக 10 வயது மாணவர் தனது இரு கை விரல்களில் 50 கார்களை ஏற்றி உலகசாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த தாமரங்கோட்டை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் - வேம்பு தம்பதியரின் 10 வயது மகன் நாராயணமூர்த்தி. அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் இவர், கொரோனா விழிப்புணர்வுக்காக துவரங்குறிச்சி பெட்ரோல் பங்க் அருகில் உலகசாதனை முயற்சியாக தனது இரண்டு கை விரல்களில் 50 கார்களை ஏற்றி சாதனை செய்தார்.

இந்த நிகழ்ச்சியை போலீஸ் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் தொடங்கி வைத்தார். மாணவர் நாராயணமூர்த்திக்கு தாமரங்கோட்டை மற்றும் துவரங்குறிச்சி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கராத்தே மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து சாலையின் இருபுறங்களிலும் நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com