கிறிஸ்துவ ஆசிரியை உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் - மதங்களை கடந்த மனிதநேயம்..!

கிறிஸ்துவ ஆசிரியை உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் - மதங்களை கடந்த மனிதநேயம்..!
கிறிஸ்துவ ஆசிரியை உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் - மதங்களை கடந்த மனிதநேயம்..!

திருவள்ளூரில் கொரோனாவால் உயிரிழந்த கிறிஸ்துவ ஆசிரியையின் உடலை இஸ்லாமியர்கள் அடக்கம் செய்தனர்.

சென்னையை அடுத்த செங்குன்றம் ஆட்டந்தாங்கல் பாலகணேசன் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை டார்லிங் (69). இருதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த இவரை, கடந்த 25ஆம் தேதி கிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடலை பெற்று கொண்ட அவரது மகன்களுடன் மருத்துவமனை நிர்வாகமோ, மாநகராட்சி ஊழியர்களோ யாரும் அடக்கம் செய்ய வரவில்லை.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷேக் முகமது அலிக்கு கிடைத்த தகவலின்பேரில், அவரது ஏற்பாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் உடலை அடக்கம் செய்ய முன்வந்தனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி கவச உடைகளை அணிந்து, நல்லூரில் கிறிஸ்துவ இடுகாட்டில் அடக்கம் செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியை டார்லிங்கின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே இவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது. உதவியின்றி தவித்தவர்களுக்கு மதத்தைக் கடந்த மனிதநேயத்துடன் உதவிய செயல் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com