\
தினகரனுக்கு குக்கர் சின்னம்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரனுக்கு குக்கர் சின்னம்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரனுக்கு குக்கர் சின்னம்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக இரு அணிகளாக செயல்பட்ட போது தாற்காலிக கட்சிப் பெயர்கள் கொடுக்கப்பட்டது. அதன்பின் அணிகள் இணைந்ததால்  ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணியே உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்நிலையில் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது. இதனால் இரு அணிகளாக இருந்த நேரத்தில் சசிகலா அணிக்கு கொடுக்கப்பட்ட அதிமுக அம்மா என்ற பெயரையும் , குக்கர் சின்னத்தையும் அடுத்து வரும் தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரி, தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானது.அதில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தினகரன் பரிந்துரைத்த கட்சி பெயர்களில் மூன்று பெயர்களில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com