\
தமிழகத்தில் மீண்டும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் பட்டியல்

தமிழகத்தில் மீண்டும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் பட்டியல்

தமிழகத்தில் மீண்டும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் பட்டியல்
Published on: 

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் வெளியான தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலில் தமிழ்மொழி இடம்பெறாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே நேற்று புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள 9 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பெயர் மற்றும் தொகுதிகள் அடங்கிய விவரங்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய 3 மொழிகளில் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் தமிழகத்தில் வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் தமிழ்மொழி இடம்பெறாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே விவரங்கள் இடம்பெற்றிருந்தது. இதனால் தமிழகத்தில் தமிழ்மொழி இடம்பெறாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com