மு.க.ஸ்டாலின் குறித்து சர்ச்சை போஸ்டர்... திமுகவினர் சாலை மறியல்

மு.க.ஸ்டாலின் குறித்து சர்ச்சை போஸ்டர்... திமுகவினர் சாலை மறியல்

மு.க.ஸ்டாலின் குறித்து சர்ச்சை போஸ்டர்... திமுகவினர் சாலை மறியல்
Published on

ராமநாதபுரத்தில் மு.க.ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 


ராமநாதபுரத்தில் நேற்று நள்ளிரவு திடீரென பல்வேறு இடங்களில் மு.க.ஸ்டாலின் குறித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் மு.க.ஸ்டாலின் படத்தையும் எடப்பாடி பழனிசாமி படத்தையும் போட்டு தன்னம்பிக்கை மிக்க தலைமையா, துண்டுச்சீட்டு தலைமையா? உழைப்பை நம்பலாமா, பிறப்பை நம்பலாமா? என்று கேள்வி எழுப்பிய வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ராமநாதபுரம் நகரில் பல இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுவரொட்டிகளை பார்த்த திமுகவினர் ஆத்திரமடைந்து, திமுக நகர செயலாளர் கார்மேகம் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே சுவரொட்டியை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

புதிய பேருந்து நிலையம் அருகே தரையில் அமர்ந்து வாகனங்களை செல்ல அனுமதிக்காமல் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலைமறியல் திரும்பப் பெறப்பட்டது. அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com