ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு

ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக ஆதரவு வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தப்பட்ட நிலையில், திமுகவின் கதிர் ஆனந்தின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டன.

வேலூர் மக்களவைக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் 50 வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதில், ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்தின் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

முதலில், அதிமுக உறுப்பினராக இல்லாமல் எப்படி ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும் என எதிர்க்கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், ஏ.சி.சண்முகம் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. ரூ.11.47 கோடி பணம் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அவரது மனுவை ஏற்க கூடாது என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஆட்சேபனை தெரிவித்தார். அதனால், கதிர் ஆனந்தின் மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக "விவசாயி" சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி வேட்புமனு ஏற்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com