நள்ளிரவை தாண்டிய ஆலோசனைக் கூட்டம் - பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு

நள்ளிரவை தாண்டிய ஆலோசனைக் கூட்டம் - பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு
நள்ளிரவை தாண்டிய ஆலோசனைக் கூட்டம் - பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு

பாஜக மத்திய தேர்தல் பணிக்குழு நள்ளிரவு வரை ஆலோசனை நடத்திய நிலையில், தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எனத் தெரிகிறது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கும் பாரதிய ஜனதா கட்சி, வேட்பாளர்களை இன்னும் முடிவு செய்யவில்லை. இதுகுறித்து டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில், கட்சியின் மத்திய தேர்தல் பணிக்குழு ஆலோசனை நடத்தியது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையிலான இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நள்ளிரவை தாண்டியும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. தமிழகத்திலிருந்து பாஜக சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் இன்று வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com