அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய முடியாது - தேர்தல் ஆணையம்

அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய முடியாது - தேர்தல் ஆணையம்
அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய முடியாது - தேர்தல் ஆணையம்

பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள், மாநில முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதியளிக்க முடியாது. தொகுதி வாரியாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதைப் போல், பதிவு செய்யப்பட்ட தங்கள் கட்சிக்கும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என, மனுதாரர் கட்சி தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமில்லாத கட்சிகள், தொகுதி வாரியாக, தேர்தல் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, பிரச்சாரம் செய்ய அனுமதி பெறலாம் என கடந்த 15ம் தேதியே பதிலளித்துள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், தேர்தல் ஆணையத்தின் பதிலின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மனுதாரர் கட்சி எடுக்கலாம் எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com