தமிழகத்தில் இடைத்தேர்தலை நிறுத்த சதி: மு.க.ஸ்டாலின் புகார்
தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நிறுத்த சதி நடப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கஜா புயல் நிவாரண நிதி வழங்காத மத்திய பாஜக அரசுடன், அதிமுக கூட்டணி வைத்துள்ளதை மக்கள் ஏற்க மாட்டா ர்கள் என்று கூறினார். நீட் தேர்வை ரத்து செய்வதாக அதிமுகவினர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என்றும், காங்கிரஸின் தேர்தல் அறிக் கையைப் பார்த்து பிரதமர் நரேந்திர மோடி அச்சத்தில் இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை காப்பாற்றுவதற்காக, வருமான வரி சோதனை என்ற பெயரில் ஆம்பூர், குடியாத்தம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலை நிறுத்த சதி நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். தேர்தலுக்கு முன்பு வரை பாஜகவையும், மத்திய அரசையும் குறை கூறி வந்த தம்பிதுரை தற்போது அவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

