பாஜக தலைமையை மூன்றாவது அணி ஏற்று கொண்டால், கூட்டணி வைப்பது பற்றி தேர்தலின்போது பரிசீலிக்கப்படும் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் விபி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் விபி.துரைசாமி, “புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது திமுக மற்றும் மன்மோகன் சிங் தான். நீட் தேர்வு காரணமாக 13 பேர் இறந்ததற்கு காரணம் திமுகவும் காங்கிரஸும் தான்.
கருணாநிதி இறந்தபோது மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதியளிக்க சொன்னது பிரமதர்மோடி. பாஜக தலைமையை மூன்றாவது அணி ஏற்றுகொண்டால் கூட்டணி வைப்பது பற்றி தேர்தலின்போது பரிசீலிக்கப்படும். பாஜகவில் தினந்தோறும் திமுகவினர் சாரை சாரையாக இணைந்து வருகின்றனர். மேலும் திமுகவில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களும் வருவார்கள்” எனப் பேசினார்.