காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமனம்

காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமனம்
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமனம்

காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பார்வையாளராக கேரளாவைச் சேர்ந்த ரமேஷ் சென்னிதலா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ரமேஷ் சென்னிதலாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒருங்கிணைவு மற்றும் பரப்புரைக்கான பணிகளை மேற்பார்வையிடும் மூத்த தேர்தல் பார்வையாளராக தங்களை காங்கிரஸ் தலைவர் நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக - காங்கிரஸ் இடையேயான இடப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com