பேரூராட்சி அலுவலரை பணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது
பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் பேரூராட்சி செயல் அலுவலரை பணம் கேட்டு மிரட்டிய காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவராக இருந்தார். இவர் பூலாம்பாடி பேரூராட்சிக்குப் புதிதாக நியமிக்கப்பட்டு பதவியேற்ற செயல் அலுவலர் ரமேஷிடம் பணம்கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.
பணம் கொடுக்காவிட்டால் பொய்ப் புகார் அளிக்கப் போவதாகவும் சுந்தர்ராஜ் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பூலாம்பாடி செயல் அலுவலர் ரமேஷ் அரும்பாவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சுந்தர்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பின்னர், சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.