டிரெண்டிங்
‘அய்கிடோ’ தற்காப்பு கலையில் கேரள கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்த ராகுல் காந்தி
‘அய்கிடோ’ தற்காப்பு கலையில் கேரள கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்த ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ‘அய்கிடோ’ என சொல்லப்படும் ஜப்பானிய தற்காப்பு கலையில் கேரள கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து அசத்தியுள்ளார். கொச்சியில் உள்ள புனித தெரேசா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற ராகுல் காந்தி மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்துள்ளார்.
கேரளாவில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சிக்காக கேரளாவில் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அப்போது கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
“இந்த கலை நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். நம் ஒவ்வொருவருக்கும் நல்ல பலமானதாக உள்ளது. உங்களை சரியான இடத்தில் நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம் அது வெளிப்படும். அதை செய்யத் தவறினால் பலமானது வெளிப்படாது” என சொல்லியிருந்தார் ராகுல் காந்தி.