சொகுசு விடுதியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு மிரட்டல் - தேர்தல் ஆணையத்திடம் புகார்

சொகுசு விடுதியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு மிரட்டல் - தேர்தல் ஆணையத்திடம் புகார்

சொகுசு விடுதியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு மிரட்டல் - தேர்தல் ஆணையத்திடம் புகார்
Published on

பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள குஜராத் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொ‌டர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்‌த சொகுசு விடுதிக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியதாக காங்கிரஸ் கட்சி தேர்த‌ல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக நாளைக்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பெங்களூருவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com