‘விஜய்க்கு என் வாழ்த்துகள்’ - திருநாவுக்கரசர் பேட்டி

‘விஜய்க்கு என் வாழ்த்துகள்’ - திருநாவுக்கரசர் பேட்டி

‘விஜய்க்கு என் வாழ்த்துகள்’ - திருநாவுக்கரசர் பேட்டி
Published on

விஜய் கட்சித் தொடங்கினால் அவருக்கு வாழ்த்துகள் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

‘சர்கார்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய் “நான் முதலமைச்சர் ஆனால், நடிக்கமாட்டேன். உண்மையாக இருப்பேன். நேரம் வரும்போது ஒரு தலைவன் வருவான். அவன் தலைமையில் ஒரு சர்கார் அமையும். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். அது முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் செய்துதான் தீர வேண்டும்” என்றெல்லாம் அரசியல் கலந்த  வசனங்களை சூசகமாக பேசியிருந்தார். 

விஜய்யின் இந்தப்பேச்சு அவரது அரசியல் வருகையின் வெளிப்பாடா என்ற புதிய தலைமுறையின் கேள்விக்கு 68 சதவிகித மக்கள் ஆம் என பதிலளித்துள்ளனர். புதிய தலைமுறை இணையதளத்தில் மக்களின் கருத்துக்காக விஜய்யின்‘சர்கார்’ பேச்சு அரசியல் வருகையின் வெளிப்பாடா என கேள்வி பதிவிடப்பட்டுள்ளது. அதற்கு பிற்பகல் 4 மணி நிலவரப்படி 68 சதவிகித மக்கள் ஆம் என்றும் 32 சதவிகித மக்கள் இல்லை என்றும் பதிலளித்துள்ளனர். 

இதற்கிடையே விஜய்யின் பேச்சு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பதிலளித்த தமிழக காங். கட்சி தலைவர் திருநாவுக்கரசர், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய் கட்சி ஆரம்பித்தால் அவருக்கு என் வாழ்த்துகள். அவர் ஆரம்பிக்கட்டும். அஜித்தும் கட்சி ஆரம்பிக்கட்டும். எல்லோரும் ஆரம்பிக்கட்டும். ஒன்றும் பிரச்னை இல்லை” என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com