பொன்னேரி முதல் உதகை வரை... காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

பொன்னேரி முதல் உதகை வரை... காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
பொன்னேரி முதல் உதகை வரை... காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் நாங்கள் மகிழ்ச்சியடையும் வண்ணம் அமைந்திருக்கிறது. இந்த கூட்டணி தமிழக அரசியலில் மட்டுமல்ல; இந்திய அரசியலிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் இந்த தேர்தலின் சிறப்பு. மக்கள் நம்பிக்கை மற்றும் வளர்ச்சியை கருத்தில்கொண்டு இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி 100% வெற்றிபெறும்’’ என்று பேசினார்.

1) பொன்னேரி

2) வேளச்சேரி

3) தென்காசி

4) ஸ்ரீபெரும்புதூர்

5) சோளிங்கர்

6) மேலூர்

7) காரைக்குடி

8) விளவங்கோடு

9) ஓமலூர்

10) சிவகாசி

11) ஊத்தரங்கரை

12) குளச்சல்

13) ஈரோடு கிழக்கு

14) அறந்தாங்கி

15) விருத்தாசலம்

16) உடுமலைப்பேட்டை

17)கள்ளக்குறிச்சி

18) திருவாடானை

19) மயிலாடுதுறை

20)கோவை தெற்கு

21) கிள்ளியூர்

22) நாங்குநேரி

23) ஸ்ரீவில்லிபுத்தூர்

24) ஸ்ரீவைகுண்டம்

25) உதகை

ஆகிய தொகுதிகள் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் குளச்சல், விளவங்கோடு, கோவை தெற்கு, காரைக்குடி, உதகை ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ் - பாஜக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com