பாலியல் தொல்லை கொடுத்ததாக காங். பிரமுகரை செருப்பால் அடித்து தாக்கிய சகோதரிகள்!

பாலியல் தொல்லை கொடுத்ததாக காங். பிரமுகரை செருப்பால் அடித்து தாக்கிய சகோதரிகள்!
பாலியல் தொல்லை கொடுத்ததாக காங். பிரமுகரை செருப்பால் அடித்து தாக்கிய சகோதரிகள்!

உத்தர பிரதேசத்தில் தன் மூத்த சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி ஜலாவுன் மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர் இரண்டு சகோதரிகள்.

உத்தரபிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அனுஜ் மிஸ்ரா(42). ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ரயில் நிலைய சாலையில், இரண்டு பெண்கள் ‘இனிமேல் இப்படி செய்வாயா’ என்றுக் கூறிக்கொண்டே மிஸ்ராவை செருப்பால் அடித்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மிஸ்ரா இருவரிடமும் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். ஒரு பெண்ணின் காலையும் தொட்டுக் கும்பிடுகிறார்.

இதுபற்றி காவல்துறை அதிகாரி எஸ்.பி யெஸ்வீர் சிங், ‘’அனுஜ் மிஸ்ரா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார். ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றத்திற்காக இந்திய சட்டப்பிரிவு 354ஏஇன் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் கொடுத்த வழக்கில், மிஸ்ரா தினமும் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கூறியுள்ளார்.

கிடைத்த தகவலின்படி சகோதரிகள் இருவருக்கும் அவரை பல வருடங்களாகத் தெரியும். இது அவர்கள் குடும்பங்களுக்கும் தெரியும். குற்றம்சாட்டியவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் வெவ்வேறு இடத்தைச் சேர்ந்தவர்கள். வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்’’ என்று கூறியுள்ளார். மேலும் இதற்குமுன்பு அந்த நபர்மீது எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கூறுகையில், காங்கிரஸ் ஒழுங்காற்றுக் குழு இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒன்றரை மாதங்களாக அந்த பெண் பணிக்கு வராததால் சமீபத்தில் மிஸ்ரா அந்தப் பெண்ணை பணியிலிருந்து நீக்கியதாகக் கூறியதாகவும், மேலும், அந்த பெண் சரியாக வேலை செய்யவில்லை என்றும் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அந்த பெண் இதற்குமுன்பு மிஸ்ராமீது புகார் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com