புதுச்சேரி: காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - நாராயணசாமி பெயர் இல்லை

புதுச்சேரி: காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - நாராயணசாமி பெயர் இல்லை
புதுச்சேரி: காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - நாராயணசாமி பெயர் இல்லை

புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் 15 தொகுதிகளில் 14 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஊசுடு - கார்த்திகேயன், இந்திரா நகர் - கண்ணன், லாஸ்பேட்டை - வைத்தியநாதன், கதிர்காமம் - செல்வநாதன், காமராஜ்நகர் - ஷாஜகான், முத்தியால்பேட்டை - செந்தில்குமரன், அரியாங்குப்பம் - ஜெயமூர்த்தி, மணவெளி - அனந்தராமன், ஏம்பலம் - கந்தசாமி, நெட்டப்பாக்கம் - விஜயவேணி, நெடுங்காடு - மாரிமுத்து, திருநள்ளாறு - கமலகண்ணன், வடக்கு காரைக்கால் - ஏ.வி சுப்ரமணியன், மாஹி - ரமேஷ் ப்ரேம்பாத் ஆகிய தொகுதிகள் மற்றும் பெயர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

14 பேர்கொண்ட புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் நாராயணசாமியின் பெயர் இடம்பெறவில்லை. ஏற்கெனவே அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com