\
மீதமுள்ள 4 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்: விளவங்கோட்டில் விஜயதரணி மீண்டும் போட்டி

மீதமுள்ள 4 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்: விளவங்கோட்டில் விஜயதரணி மீண்டும் போட்டி

மீதமுள்ள 4 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்: விளவங்கோட்டில் விஜயதரணி மீண்டும் போட்டி
Published on: 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிடுகின்றது. முதற்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. சில தொகுதிகளில் வேட்பாளர்களை யார் நிறுத்துவது என்பதில் உட்கட்சி பூசல் இருந்து வந்ததால் மீதமுள்ள 4 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் நிலவி வந்தது.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ ஆக உள்ள விஜயதரணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொளச்சல் தொகுதியில் பிரின்ஸ், மயிலாடுதுறையில் ராஜகுமார், வேளச்சேரியில் ஹசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com