மோடியுடன் ஆசாராம்: வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்

மோடியுடன் ஆசாராம்: வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்
மோடியுடன் ஆசாராம்: வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்

ஆசாராமுடன் பிரதமர் மோடி இருக்கும் வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளதால், அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராமிற்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. முன்னதாக அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன், காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றியது. அதில், ஆசாராம் உடன் பிரதமர் நரேந்திர மோடி மேடையில் ஒன்றாக நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க., பழைய வீடியோவை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பிட்ட வீடியோ 2013ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும், அப்போது ஆசாராம் மீது வழக்குகள் ஏதும் இல்லை என்றும் பா.ஜ.க தெரிவித்துள்ளது. கமல்நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் ஆசாராமுடன் தொடர்பில் இருந்ததாகவும் பா.ஜ.க. கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com